தமிழர்களை பூர்வீக நிலங்களில் இருந்து விடயத்தினை கையிலெடுத்து சிங்கள மக்களை திருப்திப்படுத்த அரசு முனைகிறது -கலையரசன்

IMG 20210125 140237 1
IMG 20210125 140237 1

தமிழர்களை பூர்வீக நிலங்களில் இருந்து விடயத்தினை கையிலெடுத்து சிங்கள மக்களை திருப்தி படுத்த அரசு முனைகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவித்தார் .

இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

IMG 20210126 145019


இந்நாட்டில் இருக்கின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பாரக்கின்ற போது தமிழ் மக்கள் இந் நாட்டில் வாழலாமா என்ற ஐயப்பாடு எழுகின்றது. ஏன் எனில் உலகநாடுகள் அனைத்தும் உலகம் பூராகவும் தீவிரமடைந்து வரும் கொரோனா நோயினை எவ்வாறு ஒழிக்கலாம் என்று அல்லும் பகலுமாக உழைத்து கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் இலங்கை அரசு மாத்திரம் வடகிழக்கு பிரதேசங்களில் எவ்வாறு தமிழர்களை அடக்க முடியும் . தமிழர்களுடைய நிலங்களை எவ்வாறு ஆக்கிரமிக்க முடியும் என்ற வகையில்தான் அரசாங்கம் கிழக்கில் முன்னெடுத்து வருகின்றது.

IMG 20210126 145541

இச் செயற்பாடுகள்  நாட்டில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான விடயமாக இல்லை. மாறாக தமிழர்களின் நிலங்களை எவ்வாறு கையகப்படுத்தலாம் ,தமிழர்களை அவர்களது பூர்வீக இல்லங்களில் இருந்து வெளியேற்றலாம் என்ற திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.இவை நிறுத்தப்பட வேண்டும்.
 இன்று நேற்றல்ல அறுபது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் சொல்ல முடியாத விடயங்களை தொடர்ச்சியாக  அனுபவித்த தமிழர்களின் வாழ்விடங்களை அகற்றுவதற்கும் , ஆலயங்களை கையகப்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

IMG 20210126 145554

இன்று மனிதர்கள் மாத்திரமல்ல கால்நடைகள் கூட இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மயிலத்தமடு மேச்சல் தரையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் கூட ஈவிரக்கமற்ற முறையில் அண்மை காலமாக கொல்லப்படுகின்றது. இவ்வாறு ஈவிரக்கமற்ற முறையில் அராஜக அரசு செயற்படுகின்றது.

IMG 20210126 145545


தற்போது அரசியல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வரும் இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு இவ்வாறான நிலை எமது அரசினால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற விடயங்களை சொல்லி பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில்  தமக்கான ஆதரவினை பெருக்கி கொள்ள முனைகின்றதா என்ற கேள்வி எமக்கு  எழுகின்றது. 
இந்த அரசாங்கம் இவ்வாறான விடையங்களை நிறுத்தி  சமத்துவமான முறையில்  மக்களை ஒன்றிற்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடு சபைகள் கூட இலங்கை அரசை மிக வன்மையாக கண்டித்துள்ளது. இந் நிலை  தொடருமானால் நாட்டில் மிக மோசமான சூழல் ஏற்படும் என தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.