சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது என கோட்டா அரசிடம் மங்கள சுட்டிக்காட்டு

R2eaa306a935eadb3607b303604832a93
R2eaa306a935eadb3607b303604832a93

அரசின் கேவலமான நடவடிக்கைகளால் இலங்கை இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது. அதைச் சமாளிக்கவே கோட்டாபய அரசு புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளது. இது சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைஎன்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கடந்தகாலப் போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மீள ஆராய்கின்றோம் என்ற பேரில் சர்வதேசத்தை ஏமாற்று வகையில் புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். அரசின் இந்த ஏமாற்று நாடகத்தைப் பார்க்கச் சர்வதேசம் ஒருபோதும் தயாராக இல்லை.

ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கையை அன்று நல்லாட்சி அரசு காப்பாற்றியது. ஆனால், இலங்கையை இன்று ஐ.நாவின் வலையில் சிக்கவைத்துள்ளது கோட்டாபய அரசு – என்றார்.