இராஜாங்க அமைச்சர் விதுர தலைமையில் குருந்தூர் மலை குறித்து இன்று முக்கிய பேச்சு!

Rc03896bbe5305e9e89500f1f18ac188c
Rc03896bbe5305e9e89500f1f18ac188c

முல்லைத்தீவு – குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் அபாயமுள்ளது எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின்போது யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் அரசியல்,  சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தரப்பு துறைசார்ந்தவர்களை குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சிகளின்போது, ஈடுபடுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.