வாகன விபத்தின் காரணமாக நேற்றைய தினம் 15 பேர் உயிரிழப்பு!

ACCIDENT 1
ACCIDENT 1

சமீப காலத்தில் ஆகக்கூடிய வாகன விபத்து மரண எண்ணிக்கை நேற்று (18) பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்தின் காரணமாக நேற்றைய தினம் (18) 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 8 பேரும், பாதசாரிகள் 7 பேரும் அடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பிரதி காவல்துறை மா அதிபரும், காவல்துறை ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹண, நாளாந்தம் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கான இயலாமை மதிப்பெண்கள் தரப்படுத்தல் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.