ஒருவர் பெற்றுக்கொள்ளும் இரு தடுப்பூசிகளும் ஒரே வகையாக இருக்க வேண்டும் – சுதர்ஷனி

download 1 24
download 1 24

நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசியையே அவர்களுக்கு இரண்டாவது முறையாகவும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியின் முதல் டோஸ் வைரஸின் பரவலை 64% கட்டுப்படுத்துகின்ற நிலையில் இரண்டாவது டோஸ் 10 முதல் 12 வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனவரி 29 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி இரண்டாவது டோஸை வழங்குவதற்குரிய தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான உரிய திகதியை அதிகாரிகள் அறிவிக்கும்போது அதனைத் தவறவிடக்கூடாது என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே கேட்டுக்கொண்டார்.