ஜெனீவா அழுத்தத்திற்கு அச்சமின்றி முகம்கொடுக்க தயார்-ஜனாதிபதி

kotta 1

ஜெனீவா அழுத்தத்திற்கு தாம் அச்சமின்றி முகம்கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும்.

இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றும், இந்து சமுத்திர அதிகாரப் போராட்டத்திற்கு தாங்கள் பலியாக மாட்டோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால், தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதன் விளைவாகும்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டில் படைவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை அளிக்கும் அளவுக்கு நாட்டின் இறையாண்மை சிதைந்தது.

பழக்கப்பட்ட யானைகள் தொடர்பில் பிரச்சினை ஏற்படுத்தி, கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால் கூட்டுறவு ஒப்பந்தம் மற்றும் கிழக்கு முனையம் போன்ற ஒப்பந்தங்களுக்கு வந்தபோது நாடு பெரும் நெருக்கடியில் மூழ்கியது.

அவற்றுக்கு இன்று தீர்வுகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அனைத்து பிரச்சினைகளையும் உருவாக்கி அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தின் பிரபலமானவர்கள், ஒருபோதும் ஆட்சியில் இல்லாதிருந்தவர்கள்போல் இன்று கருத்து வெளியிடுட்டு, செயற்படுகின்றனர்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசுவது தமது கொள்கை அல்ல என்றாலும், உண்மையை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.