இலங்கையின் நடவடிக்கை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை காட்டம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 4

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி, இடம் மற்றும் யார் அதற்குத் தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்கள் சிறிதளவே வெளியாகின்றன எனத் தெரிவித்துள்ளார் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக்கிற்கான இயக்குனர் யாமினி மிஸ்ரா.

இது தடுப்பூசியைப் பெற முயலும் மக்களுக்குத் தடையாகவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் தடுப்பூசிக்கான பெரும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக தேசிய அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு சர்வதேச சமூகம் உதவ வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.