பாடசாலைகளை மூடும் திட்டமில்லை – கல்வியமைச்சு

download 5 7
download 5 7

நாட்டின் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கான எந்த திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்று கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பாடசாலைகளில் பின்பற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் அவசியம் எனில் குளியாபிட்டி, யாழ்ப்பாணம் மற்றும் பாணந்துறை போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பாடசாலைகளை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.