தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்க்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே இல்லை-ஜெயசிறில்

IMG 20210426 193914 1
IMG 20210426 193914 1

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்க்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் ஒரு விடயமே இல்லை தேசிய ரீதியாக செயற்பட்ட தலைவரையே ஏமாற்றிய நபர், கல்முனையை தரமுயர்த்தி தருவார் என நாங்கள் நம்பி ஏமாந்தமைக்கு யாரையும் குறை சொல்ல முடியாது. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தருவார் என்கிற நம்பிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோதாபய ராஜபக்ஸவுக்கு கல்முனை தமிழ் மக்களில் குறிப்பிட்ட தொகையினர் வாக்களித்து உள்ளனர். ஆனால் இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கவலை தெரிவித்தார்.

IMG 20210426 193853

இன நல்லிணக்கத்தை முன்னிறுத்தி காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்துக்கும், அம்பாறை சதாதிஸ்ஸபுர விளையாட்டு கழகத்துக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) காரைதீவு கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ கடின பந்து கிறிக்கெட் போட்டியின் பரிசளிப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

40,000 இற்கும் மேற்பட்ட கல்முனை மக்கள் இன்று உரிமை மறுக்கப்பட்டு நிர்க்கதியாக
இருக்கிறார்கள். கல்முனை பிரதேச செயலகம் தரமுயருமென்ற நம்பிக்கையில் 7,500 இற்கும
மேற்பட்ட வாக்ககளை கோட்டாபய ராஜபக்சவிற்கு செலுத்தினார்கள். கல்முனையை போல காரைதீவும்அபிவிருத்தியடைய வேண்டுமென 125,000 இற்கும் மேற்பட்ட வாக்ககள் சிதறடிக்கப்பட்டன.பெரும்பான்மையின கட்சிக்கு ஒரு பங்கு. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு பங்கு.சிறுசிறு கட்சிகளிற்கு ஒரு பங்கு என தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து விட்டனர்.

IMG 20210426 193809

நாங்கள் ஒரு பிரதிநிதியை உருவாக்கி அபிவிருத்தி செய்ய வேண்டுமென பலர் நினைத்து
செயற்பட்டனர். கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் சுமார் 31,000
வாக்குகளை பெற்று கொடுத்தனர். இந்த 31,000 மக்களும் ஏமாந்ததென்பது சாதாரணம். இந்த
மக்களை மட்டுமல்ல, தேசிய ரீதியாக செயற்பட்ட ஒரு தலைவரையே ஏமாற்றியவரையே, நாங்கள் நம்பி ஏமாந்ததற்கு யாரும் பொறுப்பல்ல.

IMG 20210426 193830

இந்நாட்டில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தமிழர்கள் எப்போதும் தயாராகவே உள்ளார்கள் என்பதற்கான நல்லெண்ண சமிக்ஞையை காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் வழங்கியுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஏற்று அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகள் செய்து தரப்பட வேண்டும். ஆனால் யதார்த்தத்தில் அவ்வாறாகஇல்லை. எமது இந்த கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும் என்று காலம் காலமாக சிங்கள அமைச்சர்கள் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் கோரிக்கைகள்விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. அவர்களும் வந்தார்கள். வாக்குறுதிகள் தந்தார்கள்.சென்றார்கள். எவையும் நடக்கவே இல்லை என்றார்.