நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் 100 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!

WhatsApp Image 2020 12 17 at 11.30.56
WhatsApp Image 2020 12 17 at 11.30.56

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் 100 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை, குருநாகல், களுத்துறை, கம்பஹா, காலி, பொலன்னறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர்கள் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 87 கிராம சேவகர் பிரிவுகள் குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை அதிகார பிரதேசத்தில் அடங்கியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன காவல்துறை அதிகார பிரதேசத்தில் மிரிஸ்வத்தை, பெலவத்தை வடக்கு, பெலவத்தை கிழக்கு மற்றும் களுத்துறை தெற்கில் அதிகாரிகொடை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் பொல்ஹேன, ஹீரலுகெதர, களுவக்கல, அஸ்வென்தென்னை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில், ரத்கம காவல்துறை அதிகார பிரதேசத்தில் இம்புல்கொடை மற்றும் கடுதம்பே ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டன.

மாத்தளை மாவட்டத்தில், உக்குவளை காவல்துறை அதிகார பிரதேசத்தில், பல்லேகும்புர கிராம சேவகர் பிரிவும், பொலன்னறுவை மாவட்டத்தில் ஹிங்குரக்கொடை காவல்துறை அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட சிறிகெத கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.