நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது

Parliment in one site 800x534 1
Parliment in one site 800x534 1

நாடாளுமன்ற சபையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில், கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், ஆராய்வதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று(28) முதல் முறையாக கூடவுள்ளது.

குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில், பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதுடன், அதுகுறித்து சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ சுமந்திரன், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், ரஞ்சித் மத்தும பண்டார, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.