தனது காணியை 224 பேருக்கு வழங்கி நன்கொடையாளருக்கு அரசில்வாதிகள் மற்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தல்!

IMG 2228 1
IMG 2228 1

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் தனது பூர்வீக சொந்த காணியில் 10 பேச் காணி வீதம் 224 காணியில்லாத மக்களுக்கு வழங்கினேன் அதன் பின்னர் அமைச்சர் ஒருவரினதும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினதும் அடியாட்களால் அச்சுறுத்தப்படுவதுடன் அரசகாணியை மக்களுக்கு வழங்கியதாக பிரதேச செயலாளர் 4 குண்டர்களுடன் வந்து அச்சுறுத்துவதாக மக்களுக்கு காணிவழங்கழய நன்கொடையாளர் குருசுமுத்து லவக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கிரான் கிழக்கு ஏத்தலை மேட்டுகாடு பிரதேசத்திலுள்ள எனது பாட்டன் காலத்தில் ஆங்கிலேயரிடம் இருந்து (1896-3-17) பெற்றுக் கொண்ட காணியை 1972 ம் ஆண்டுக்கு பின் மீண்டும் உத்தரவுபெற்ற நில அளவையாளர் மூலமாக கடந்த 15-03-2021 அளந்து தனியார் காணி என உறுதிப்படுத்தப்பட்டு.

இக் காணியை இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நில அளவையாளரால் 09.10.2020 அன்று இக்காணியானது காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உட்படவில்லை என அதன் பணிப்பாளரால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து எனது பூர்வீக காணியான 23 ஏக்கர் காணியில் 10 பேச் வீதம் கிராமம் தோறும் காணியில்லாத மக்கள் 224 பேருக்கு கடந்த சித்திரரைப் புத்தாண்டு அன்று 15 ஏக்கர் காணியை வழங்கிருந்தேன். மக்கள் அங்கு குடியமரத் தொடங்கியுள்ளனர்.

இதன் பின்னர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அமைச்சர் ஒருவரின் அடியாட்களும் என்னை அச்சுறுத்தி வருகின்றனர். அதேவேளை பிரதேச செயலாளர் இது அரச காணி என கூறி 4 குண்டர்களுடன் புகுந்து கடமைக்கு களங்கம் விளைவித்ததாக தெரிவித்து உன்னை கைது செய்து சிறையில் அடைப்பேன் என என்னை அச்சுறுத்தினார்.

இதேவேளை கிழக்கு பிராந்திய உதவி காவல்துறை மா அதிபரால் அனுப்பப்பட்டதாக கையடக்க தொலைபேசி ஊடகா என்னை காவல்துறைக்கோ மனித உரிமை ஆணைக்குழுவிற்கோ போகவேண்டாம் உடனடியாக காணிக்குள் வரும்படி அச்சுறுத்தினார் எனவே எனக்கு தொடர்ந்து அரசியல்வாதிகளாலும் காவல்துறையினராலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பா மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.