சகல வைபவங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் -நல்லை ஆதீனம்!

20210430 182424
20210430 182424

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா என்னும் கொடிய தொற்றுநோய் தாண்டவமாடுகின்றது. பாரத தேசத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து வீழ்ந்து இறப்தை நாம் காண்கின்றோம்.

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை செய்யுங்கள்.

ஆலயங்களில் நாளாந்த பூசை, நித்திய நைமித்திய வழிபாடுகளைச் செய்யுங்கள். அடியவர்கள் ஆலயங்களில் கூடுவதைத் தவிருங்கள்.

பொதுமக்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதை இயன்றவரை கட்டுப்படுத்துங்கள்.

சுகாதார மருத்துவ சமூகத்தின் வேண்டுதலுக்கு அனைவரும் மதிப்பளித்து பாதுகாப்பாகச் செயற்படுங்கள்.

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள்.

பாரத தேசத்தில் மக்கள்படும் அவலம் ஓயவேண்டும் என அனைவரும் வீடுகளில் பிராத்தனை செய்யுங்கள்.

தெருக்களில் கூடுவதையோ தெருவோரம் வியாபாரம் செய்வதையோ சுகாதாரத்துக்கு இடையூறாக நடப்பதையோ அனைவரும் தவிருங்கள் – என்றுள்ளது