எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித் ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? விஜிந்தன்

received 775054353214342
received 775054353214342

நாங்கள் இராணுவத்தளபதியிடம் கேட்கின்ற விடையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது? என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விஜிந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் இன்று (11.05.21) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் 19 இல் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக சுகாதார துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் முற்றுமுழுதாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

மரணசடங்குகள், திருமணநிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெசாக்தினதினத்தினை கூட இடைநிறுத்தியுள்ளார்கள் தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத சோக நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு காணப்படுகின்றது.

இன்னிலையில் இராணுவத்தளபதியால் ஒரு அறிக்கை விடப்படுகின்றது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கு பற்றினால் சுகாதார நடைமுறையினை கருத்தில் கொண்டு அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது நல்லவிடையம் நேற்று(10) இரவு எங்கள் முல்லைத்தீவு பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் 30க்கு மேற்பட்ட புத்த பிக்குகளும் இராணுவத்தளபதிகள் பல நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பிரித் ஓதுதல் என்ற சமைய நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

நாங்கள் இராணுவத்தளபதியிடம் கேட்கின்ற விடையம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல் பிரித்ஓதுதல் நிகழ்வு எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டது?

அரசாங்கத்தால் விடுக்கப்படுகின்ற அறிக்கை சட்ட திட்டங்களை பிரதேச சபையாகிய நாங்களும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய பாரியபொறுப்பு இருக்கின்றது இவ்வாறான நிலையில் கொவிட்19 தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கின்ற சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு ஒருநீதியும், சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் இந்த மண்ணில் நடந்தேறுவது மனவருத்தமாக இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தடைசெய்கின்ற இந்த அரசாங்கம் எந்த விதமான அனுமதியும் இல்லாமல் எங்கள் பிரதேசத்திற்கு பல்வேறு பட்டஇடங்களில் இருந்து வருகை தந்து இந்த பிரித்ஓதும் நிழக்வில் பங்குபற்றியமையால் எங்கள் சமூகத்திற்கு கொவிட் 19 பரவக்கூடிய வாய்ப்பிருக்கின்றது.

இன்னிலையில் இராணுவத்தளபதி சரியாக இந்த விடையத்திற்கு பதில் சொல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளனவா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு.. பதிலளிக்கையில்.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு உணர்வுரீதியான ஆத்மரீதியான நிகழ்வாக நாங்கள் ஒவ்வொரு தமிழர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இதனை செய்யவேண்டும் என்ற மனத்துடிப்பும், உணர்வும் எல்லா மக்களுக்கும் இருக்கின்றது.
சுகாதார நடைமுறைகளுக்கு மதிப்பளித்து நல்லதொரு சூழல் வந்தால் நிகழ்வினை நினைவிற்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை இதுகுறித்து சுகாதாரதுறையுடன் கலந்தாலோசித்து சுகாதார நடைமுறையுடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.