கொரோனாவால் 41 வயதுக்கு குறைவான 51 பேர் உயிரிழப்பு!

Corona Death 2
Corona Death 2

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 41 வயதுக்கும் குறைவான 51 பேர் இது வரை பலியாகியுள்ளனர் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி 9 வயதுக்கிடைப்பட்ட இருவரும், 10 – 30 வயதுகளுக்கிடைப்பட்ட 15 பேரும், 31 – 40 வயதுகளுக்கிடைப்பட்ட 34 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 41 – 50 வயதுகளுக்கிடைப்பட்ட 87 பேரும், 51 – 60 வயதுகளுக்கிடைப்பட்ட 171 பேரும், 61 – 70 வயதுகளுக்கிடைப்பட்ட 321 பேரும், 71 வயதுக்கும் மேற்பட்ட 567 பேரும் இதுவரை பலியாகியுள்ளனர்.