மட்டு கோட்டை பூங்காவிலுள்ள குளத்தில் ஆணையாளர் குப்பைகளை கொட்டி மூட முயற்சி; உடன் நிறுத்துமாறு மாநபர சபை முதல்வர் உத்தரவு !

.jpg
.jpg

மட்டக்களப்பு கோட்பாக் என்றழைக்கப்படும் கோடைபூங்காவிலுள்ள சிறிய குளத்தை மாநகரசபை முதல்வரின் அனுமதியின்றி குப்பைகளை கொட்டி அதனை மூட மாநகரசபை ஆணையாளர் எத்தனிப்பது நகரத்தை அழகுபடுத்துவதல்ல அசிங்கப்படுத்தும் நடவடிக்கையாக உள்ளது என இந்த நடவடிக்கை உடன் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக மட்டு மாநகரசபை முதல்வர் சரவணபவான் தெரிவித்தார்.

IMG 3056 1

குறித்த பூங்காவிற்கு இன்று திங்கட்கிழமை (24) சென்று பார்வையிட்ட மாநகர முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

குறித்த பூங்காவில் கடந்த காலத்தில் முன்னாள் அரசாங்க அதிபர் மா. உதயகுமார் மாநகர ஆணையாளராக இருக்கும் போது நிர்மாணிக்கப்பட்டு ஒழுங்காக பராமரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோட்டை பூங்காவில் அனுமதி இல்லாத செயற்பாடுகள் நடைபெறுவதை அவதானிக்கப்பட்ட நிலையில் எந்த செயற்பாடுகளும் அனுமதியில்லாமல் செய்ய கூடாது என ஆணையாளருக்கும் பிரதி ஆணையாளருக்கும்  கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன்.

இருந்தபோதும் இன்று எனக்கு ஒரு முறைப்பாடு கிடைத்தது  பூங்காவிலுள்ள சிறிய குளத்தை  குப்பைகளை போட்டு மூடுவதாக இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பாக ஆணையாளருக்கு தொலைபேசி எடுத்தால் அவர் அதற்கு பதில் இல்லை அவ்வாறே பிரதி ஆணையாளரும் பதில் இல்லை. மேற்பார்வையாளரிடம் கேட்டபோது அவர் ஆணையாளர் குப்பையை கொட்டுமாறு  தெரிவித்ததாக கூறினார்.

எனவே தற்போது இணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர்களுக்கு கடிதம் போட்ட நிலையில் இன்று அவர்களுக்கு மீண்டும் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு தொலைபேசியில் குரல்பதிவு ஒன்றை அனுப்பியுள்ளேன். 
இது உண்மையிலே நகரத்தை அழுகுபடுத்துவதில்லை அசிங்கப்படுத்தும் வேலை எனவே எந்தவித அனுமதியுமின்றி செய்யப்பட்ட வேலைகளுக்கு பொறுப்பாளி மாநகர ஆணையாளர்தான். மூன்று நாட்களுக்கு முன் மரங்கள் வெட்டப்பட்டிருந்தது அதற்கு கூட எங்களிடம் அனுமதி பெறவில்லை அதற்கு எதிராக ஒழுக்ககாற்று நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் தடை உத்தரவு எடுக்கப்பட்டது. அவருக்கு பின்புலமாக அரசியல் வாதிகளாக இருக்கின்றனர். மாநகரசபை சட்டங்கள் மீறப்படும்போது ஒழுக்ககாற்று நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படவேண்டும. ஆனால் மாநகரசட்டத்தை  மீறப்படும்போது ஒழுக்க காற்று நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் நாங்கள் நீதிமன்றத்தை நாடவேண்டியுள்ளது .

நீதிமன்றம் இவரின் செயற்பாட்டை நிறுத்தவேண்டும் என தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் அதற்கு அடுத்தபடியாக மாநகரசபை அமர்வில் இவருடன் வேலை செய்யமுடியாது எனவும் இவரை இடம்மாற்றித்தரவும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே சட்பூர்வமான கோரிக்கைகள் இன்னும் செவி சாய்க்கவில்லை எதிர்காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்-என்றார்