பிரதமராக நாமல் ; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கெஹெலிய!

888888
888888

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ அடுத்த ஆண்டு அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் ‘அரசியல் வாசகங்கள்’ என கூறினார்.

தற்போது பரவி வரும் கதைகளை நீங்கள் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவதை நீங்கள் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற கூற்றுக்களை ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.