நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – நாமல்

ராஜபக் ஷ
ராஜபக் ஷ

நாட்டில் நிலவும் நிலைமைகளே எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்தது என்றும் எரிபொருள் விலை அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு இருக்க வேண்டும் என அமைச்சரும் அதிகாரிகளும் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சாத்தியம் ஏற்பட்டால் எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எரிபொருள் விலையை அரசாங்கம் அதிகரிக்கவில்லை. நாட்டின் தொற்று நிலைமை மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என அவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவு இது அல்ல என குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, நடைமுறையில் உள்ள நிலைமைகள் இந்த முடிவெடுக்க கட்டாயப்படுத்தின என்றும் சுட்டிக்காட்டினார்.