நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷகள் தோல்வி – ஜே.வி.பி

pearlonenews அநுரகுமார
pearlonenews அநுரகுமார

நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷ மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளனர். எனவே குடும்ப ஆட்சியொன்றுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ராஜபக்ஷ ஆட்சி ஆரம்பமான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை மேம்படுத்துவார் என்று கூறினார்கள். அவரின் தோல்வியையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் சுபீட்சமான நாட்டை உருவாக்குவார் என்றனர். தற்போது அவரும் தோல்வியடைந்துள்ளதால் பஷில் ராஜபக்ஷவை கூறுகின்றனர். ஆனால் அவராலும் எதனையும் செய்துவிட முடியாது.

பஷில் ராஜபக்ஷ பிறந்த நாள் முதல் அமெரிக்காவின் – லொஸ்ஏஞ்சல்கள் நகரில் வாழ்ந்து தற்போது இலங்கையின் நிலைமையைக் கண்டு, இங்கு வருகை தந்து நிலைமைகளை மாற்றக் கூடிய மாயாஜாலக்காரர் அல்ல. காரணம் பொதுஜன பெரமுன ஆட்சி ஆரம்பித்த நாள்முதல் அவரே இந்த அரசாங்கத்தை நிர்வகித்தார். கொவிட் பரவல் ஆரம்பித்த போது இரு ஜனாதிபதி செயலணிகளை நியமித்தார். அந்த இரு செயலணிகளின் செயற்பாடுகளுமே வெற்றிபெறவில்லை என்றார்.