இலங்கை அரசியல் களத்தில் பசில் சகலதுறை ஆட்டக்காரர் – ரோஹித அபேகுணவர்தன

625.500.560.350.160.300.053.800.900.160.90 45 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 45 1

இலங்கை அரசியல் களத்தில் சகலதுறை ஆட்டக்காரரே பசில் ராஜபக்ச. அவரின் அதிரடி ஆட்டத்தைப் பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கிரிக்கெட் அணியொன்றை எடுத்துக்கொண்டால் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். ஆனால், சகலதுறை ஆட்டக்காரர்களுக்கு எல்லாம் தெரியும்.

இவ்வாறுதான் இலங்கை அரசியல் களத்தில் பசில் ராஜபக்ச சகலதுறை ஆட்டக்காரர். அவரின் அதிரடி ஆட்டத்தைப் பொறுத்திருந்து பாருங்கள்” – என்றார்.