கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஐ.தே.க ஆராய்வு!

781ecolunp1172200847 5108592 26122016 MFF CMY
781ecolunp1172200847 5108592 26122016 MFF CMY

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிவிற்கு எதிராக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்மானம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு உரிய தினத்தை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

எரிபொருள் விலையேற்றித்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வலுசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியினர் நாடாளுமன்றில் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமையும், செவ்வாய்கிழமையும் இடம் பெறவுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர் மாத்திரம் பொறுப்பு கூற வேண்டிய தேவை கிடையாது. ஜனாதிபதி, பிரதமர், உட்பட முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க ஒரு தினத்தை ஒதுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதற்கமைய நாளைஅல்லது நாளை மறுதினம் பேச்சுவார்த்தை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.