நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் சந்திக்க நடவடிக்கை!

1 27
1 27

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த அனுமதியினை மீண்டும் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சந்திப்புக்கான அறைகளை ஒதுக்குவதற்கு சபை முதல்வர் தினேஸ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளதாக சபை முதல்வர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை சந்திப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 10 அறைகள் ஒதுக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையில், 7 அறைகளை முதற்கட்டமாக ஒதுக்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக படைக்கல சேவிதரினால் சபை முதல்வருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் சந்திப்பதற்கான அறைகள் திறக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.