மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – சுகாதார பிரிவு

b2263120 49dac52b ed7d54b5 14d8df91 ministry of health 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
b2263120 49dac52b ed7d54b5 14d8df91 ministry of health 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

டெல்டா திரிபு காரணமாக மேலும் ஒரு கொவிட் 19 அலை உருவானால், அது நாட்டில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் மரண வீதமும் அதிகரிக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன.

எனவே, டெல்டா வைரஸ் திரிபு குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன், சுகாதார வழிகாட்டல்களையும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.