சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

gas
gas

லாப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, லாப்ஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும்  5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 856 ரூபாயாகவும் 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.