வவுனியாவில் 5800 பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது – மகேந்திரன்

pearl one news வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 360x180 1
pearl one news வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 360x180 1

வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 பேருக்கு இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கப்பட வேண்டியுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு குறித்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம். வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 27 ஆயிரம் பேர் உள்ளனர். அதில் 5800 பேருக்கு இன்னும் தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக இராணுவத்துடன் இணைந்து வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வாரம் முழுவதும் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கி அவர்களை இறப்பு மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.