வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 5 வருடங்களில் 500 மில்லியன் ரூபா இழப்பு – டக்ளஸ்

தேவானந்தா 1 2
தேவானந்தா 1 2

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ச் ஸ்ரீ வர்தன் ஷ்ரிங்கலாவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர்,

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது, இந்த விவகாரத்தினை தீர்ப்பதற்கான முன்வரைபு ஒன்றினை வழங்கியிருந்தேன்.

அந்த முன்வரைபில், இரண்டு நாடுகளும் ‘இணைந்த கடல் பாதுகாப்பு குழு’ ஒன்றினை உருவாக்கி பாக்கு நீரினை மற்றும் மன்னார் விரிகுடா பிரதேசத்தின் வளங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வரையில் சட்ட விரோத தொழில் முறையான இழுவை வலைத் தொழிலை நிறுத்துவது எனவும் சொல்லப்பட்டுள்ளது.எனவே விரைவான நடவடிக்கைகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.