அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கம் திண்டாடுகின்றது – திலீபன்

DSC00519
DSC00519

கொரோனா காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூட சம்பளத்தினை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தியாவின் அழுத்தத்தினால் மாகாணசபை தேர்தல் நடைபெறவில்லை. தீர்க்கமான முடிவெடுக்ககூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் உள்ள அரசாங்கம் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியே இந்த தேர்தல் நடத்துவதாக தீர்மானித்துள்ளது.

ஆனால் இந்தியாவின் அழுத்தம் என்பது பொய். எமது நாடு சுயமாக ஒரு தீர்மானம் எடுக்ககூடிய வளம் மிக்க நாடு. இந்நிலையில் புதிய திட்டங்களை வரப்போகும் வரவு செலவுத்திட்டத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம். அதில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட கிராமங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எமது வன்னி பிரதேசத்திற்கும். அதற்கு ஏனைய அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல இன்று வாழ்க்கை செலவீனம் அதிகரித்துள்ளது என்பது நாட்டில் ஏற்பட்ட கொரோனா வீழ்ச்சியால் இன்று அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தினை கொடுப்பதற்கு கூட பெரும் திண்டாட்டமான நிலை ஏற்படுகின்றது. அதனால் தான் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமும் இடம்பெற்றுள்ளது. இது நிரந்தரமானதல்ல தற்காலிகமானது என தெரிவித்தார்,