அதிபர்களிடம் பாடசாலை திறப்புகளை ஒப்படைக்குமாறு எவரும் கேட்க முடியாது – இலங்கை ஆசிரியர் சங்கம்

123456
123456

புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலையின் அனைத்து திறப்புகளையும் வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா தெரிவித்துள்ளார்.

புறக்கணிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் திறப்புகளை வலயக்கல்வி திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு தெரித்துள்ள நிலையில் குறித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அதிபர், ஆசிரியர்கள் தற்போது பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொழிற்சங்க போராட்டம். இந்நிலையில் அதிபர்களிடம் திறப்புகளை ஒப்படைக்குமாறு எவரும் கேட்க முடியாது.

அவ்வாறான ஒரு தேவை இருப்பின் மாகாண கல்வி திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் அவர் வழங்க வேண்டும்.

வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கட்டளையிட முடியாது. எனவே நாடாளுமன்ற உறுப்பினருக்கு திறப்பை ஒப்படைக்க கூற எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்தார்.