எம்மைச் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் – முன்னாள் போராளிகள்

252751329 4676982439024723 517376627636973930 n 1
252751329 4676982439024723 517376627636973930 n 1

மூன்று தசாப்தகாலப் போருக்கான காரணம் என்ன? அதற்குரிய தீர்வுகள் எவை? என்பதை ஆராயாமல் பாதிக்கப்பட்ட சமூகத்தின் காயங்களுக்கு மருந்திடமுடியாது. கடந்தகாலத்தை மறந்துவிட்டு முன்நோக்கிப் பயணித்தல் என்பது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. 

போரில் பங்கேற்ற இரண்டு தரப்புக்களில் தமிழ்த்தரப்பு தற்போது முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் ‘வெற்றியீட்டிய தரப்பாக’ இருந்துகொண்டு இப்பிரச்சினையை அணுகுகின்றது என்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் கண்ணீர்மல்க சாட்சியமளித்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய சமூகங்களுக்கு இருக்கின்ற உரிமைகளைத் தமிழ்மக்களும் அனுபவிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்கும் அதேவேளை, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களின் காணிகள் அவர்களிடம் மீளக்கையளிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக போரில் உயிரிழந்த முன்னாள் போராளிகளை அவர்களது உறவினர்கள் நவம்பர் 27 ஆம் திகதியன்று நினைவிடங்களுக்குச்சென்று நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.