அரசின் திட்டத்தை முறியடிக்க தீவிர முயற்சியில் பங்காளிகள்

4ebcebbc fa04b659 1fba67d1 wimal weerawansa 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped copy
4ebcebbc fa04b659 1fba67d1 wimal weerawansa 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped copy

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக் கட்சிகள், அரசின் இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அரசு வசமே இருக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி பங்காளிக் கட்சிகளால் அண்மையில் ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் நடைபெற்ற இரகசிய சந்திப்பொன்றின்போதே பங்காளிக் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது