நாட்டை முடக்குவதே எதிர்க்கட்சியின் நோக்கம்! – நாலக்க பண்டார

Parliament of Sri Lanka 04 850x460 acf cropped
Parliament of Sri Lanka 04 850x460 acf cropped


நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஏற்படுத்தி நாட்டைச் செயலிழக்க செய்வதற்கே எதிர்க்கட்சிக்கு விரும்புகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.

மாத்தளை, கோட்டுவ வீதி அபிவிருத்திப் பணியை நேற்று ஆரம்பித்த வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரு இலட்சம் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த வீதியானது 8.29 மில்லியன் ரூபா செலவில் காபட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளது.

தற்போதைய அரசு மக்களின் துயரங்களை நன்கு உணர்ந்துள்ளது. சில பிரச்சினைகளுக்கு மிகக் குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் பல வருடங்களாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. தற்போதே சரியான பாதையில் செல்கின்றது.

இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பிரச்சினைக்குள் தள்ள வேண்டும் என்பதே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் நோக்கமாகும்” – என்றார்.