சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டன போராட்டம்

thumb Canadian Tamil Font Sumanthiran sanakkiyan Genocide
thumb Canadian Tamil Font Sumanthiran sanakkiyan Genocide

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கனடிய வருகைக்கு எதிராக கண்டனப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1686எல்லெஸ்மியர் சாலை ஜே.சி எஸ் விருந்து மண்டபம் (Ellesmere Rd JC’S Banguet Hall) இக்கு முன்பாக இக்கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்களான கனடியத் தமிழர் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நெஞ்சிலே நிறுத்தி அனைத்து கனடியத் தமிழர்களும் மற்றும் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இக்கண்டன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு அழைப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்