பொறுப்புள்ள மனிதர்களாக பெறுமதிமிக்க மனித உயிரையும் அபாயங்களையும் காப்பற்றிட ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கரைதுறைப்பற்று தவிசாளர் கோரிக்கை

received 2940908646196928
received 2940908646196928

பொறுப்புள்ள மனிதர்களாக பெறுமதிமிக்க மனித உயிரையும் அபாயங்களையும் காப்பற்றிட ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் கரைதுறைப்பற்று பிரதேச சபை  தவிசாளர் கமலநாதன் விஜிந்தன்  கோரிக்கை விடுத்துள்ளனர்

IMG 20211215 120322

கட்டாக்காலி கால்நடைகளால் எமது பிரதேசத்தில் பகல் இரவு பாராது போக்குவரத்துடன் கூடிய வீதிகளிலே தங்குவதை யாரும் மறுத்திட முடியாது உரிமையாளர்கள் இதனால் ஏனையவர்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உயிர் ஆபத்துக்களையும் அங்க இழப்புக்கள் மற்று வாகன இழப்புக்களையும் அறியாதவர்கள் இல்லை என்பது நிஜம்.
  கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தி பெரும் ஆபத்துக்களையும்  போக்குவரத்து இடையூறுகளையும் குறைக்க வழி செய்மாறு பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் ஊடகங்கள் ஊடாகவும் தொடர்ச்சியாக எம்மிடம் வலியுறுத்தப்பட்டது வலியுறுத்தப்படுகிறது.


இவற்றையெல்லாம் உள்வாங்கியவர்களாகவும் நேரடியாக பார்ப்பவர்கள் என்ற வகையில் கடந்த சில வாரங்களிலிருந்து கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதில் சபை மிக பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருகின்றது. 
இதனால் பல சவால்களையும் அசெளகரியங்களையும் எமது பணியாளர்கள் பணிநேரத்திலும் சொந்த வாழ்விலும் நித்தமும் எதிர் நோக்குகிறார்கள். 

IMG 20211215 120413


அந்தவகையில் தொலைபேசி மிரட்டல்,வீதிகளில் வைத்து தாக்குதல்,போதையில் வீடு சென்று ஏசுதல்,கொலைஅச்சுறுத்தல், கடமைக்கு இடையூறு விளைவித்தல்,அலுவலகத்திற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டுதல்,குடும்பத்தை இழுத்து அவதூறான வார்த்தைகளால் ஏசுதல்இவ்வாறான பல ஏற்க முடியாத சுமைகளை சுமந்து நித்திரை பாராது பணிசெய்ய வேண்டியவர்களாக எமது பணியாளர்கள் காணப்படுகிறார்கள்.

எனவே அரச  அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் சமூக சிந்தனையாளர்கள் ஊடகவியலாளர்கள் கால்நடை உரிமையாளர்கள் பால் உற்பத்தி நிர்வாகத்தினர் கால்நடை திணைக்களம் கிராம மட்ட அமைப்புக்கள் சமூக வலைத்தள பாவனையாளர்கள் யாவரும் இத்தகைய எமது பணிக்கு ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் வழங்கும் வகையில் மக்கள் மத்தியிலும் கால்நடை உரிமையாளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.என தெரிவித்துள்ளார்


இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் கட்டாக்காலி கால்நடைகளால் ஏற்படும் ஆபத்துக்களை தடுக்கும் முகமாக வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் இனைந்து ஒரு தொகுதி கட்டாக்காலி கால்நடைகளை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது