ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்!

3f8e1768 66fe1a1a protest 850x460 acf cropped
3f8e1768 66fe1a1a protest 850x460 acf cropped

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஆகஸ்ட் 3ம் திகதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.