யாழ். சென்ற பேருந்து கிளிநொச்சியில் விபத்து – 23 பேருக்கு காயம்

WhatsApp Image 2022 12 05 at 9.37.55 AM
WhatsApp Image 2022 12 05 at 9.37.55 AM

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று(5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை என காவல்துறை குறிப்பிட்டுள்ளது