தேர்தலை தாமதப்படுத்த ஆதரவளியோம்- ஆணைக்குழு

vote
vote

தேர்தலை, உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல்கள் தலைவர் புஞ்சிஹேவா, எல்லை நிர்ணய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு தேர்தலை தாமதப்படுத்துவதற்கு ஆணைக்குழு ஆதரவளிக்காது என்று தெரிவித்தார்.

அந்தவகையில், உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, தெரிவு செய்யப்படாத அதிகாரிகளுக்கு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை தாமதப்படுத்த எல்லை நிர்ணய குழுவை பயன்படுத்த முடியாது என்றும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை விரைவில் கோரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.