உள்ளூராட்சி தேர்தல்: அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழிவு!

86d6a857b543d2789f11e776ffb0e72a XL
86d6a857b543d2789f11e776ffb0e72a XL

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் செய்திச் சேவை ஒன்று வினவியபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அஞ்சல் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது