இன்று நள்ளிரவு முதல் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
விலை சூத்திரத்துக்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அவர் செய்தி சேவை ஒன்றுக்கு குறிப்பிட்டார்.
இதன்படி, இன்று எரிவாயுவின் விலையை உறுதியாக குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று முற்பகல் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
அதேநேரம், தற்போதைய சர்வதேச விலைக்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்கக் கூடிய நிலை உள்ளது.
இதற்கமையவே தற்போது கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு என்பன இந்த விடயத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.