ரணிலை ஆதரித்தால் தீர்வு உடன் கிடைக்கும்! –மனுஷ நாணயக்கார

manusha
manusha

“தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தினால் தீர்வை விரைவில் வென்றெடுக்க முடியும். அதைவிடுத்து இனவாத நோக்குடன் அரசு மீது விமர்சனங்களை முன்வைப்பதால் எதனையும் பெற முடியாது” – என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இது ராஜபக்சக்கள் தலைமையிலான ஆட்சி அல்ல; ரணில் தலைமையிலான ஆட்சி.

இந்த ஆட்சியில் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் ஒருபோதும் இடமில்லை. தமிழர்களை அரவணைத்தே இந்த அரசு பயணிக்கின்றது.

இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் சிலர் இனவாத நோக்குடன் எம்முடன் முட்டிமோதுகின்றனர்.

அரசை அவர்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவதை உடன் நிறுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு காணும் நடவடிக்கையில் நாம் அனைவரும் இறங்க வேண்டும்.” – என்றார்.