ஐ.தே.க தலைமைத்துவத்தை ஏற்க ருவன், அர்ஜூன தயார்

arjuna
arjuna

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இரு வேறு நிகழ்வுகளில் ஒரே கருத்தை இவர்கள் தெரிவித்துள்ளனர்

நடந்து முடிந்த தேர்தலை கட்சியின் தோல்வியாக நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாகக் கருதுவதாகவும் ருவன் கூறியுள்ளார்.  இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள தற்போது சந்தர்ப்பம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, கட்சி ஆதரவாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் காலம் உருவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினை மற்றும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக சர்ச்சைகள் நிலவிவரும் நிலையிலே அர்ஜூன இவ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மஹரவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.