உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேரம் பேசிய மைத்திரி!

maiththiry
maiththiry

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அழைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி அளித்துள்ளார்.

ஓய்வூதியத்தை அளித்தல் அத்துடன் அவர் விரும்பும் நாட்டில் தூதுவராக நியமித்தல் என்பனவே அவை என ஹேமசிறி பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தாம் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு திட்டங்களை முன்வைத்தேன்.

அதனை அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்ளவில்லை.

இதன் காரணமாக பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சரியான நடைமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.