நாட்டை பிரிக்கும் செயற்பாடே திலீபன் விவகாரம் என்கிறார்- கெஹலிய

rambukewlla
rambukewlla

நாட்டைப் பிரிக்கவும் நாட்டில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தவும் சில தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டமே இந்த திலீபன் விவகாரம் ஆகும். நாட்டை பிரிவினையை நோக்கி கொண்டு செல்லும் ஒரு சதித்திட்டத்தின் ஆரம்ப அத்தியாயமாகவே நாங்கள் திலீபன் விவகாரத்தைப் பார்க்கின்றோம். என அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்

பயங்கரவாதிகளையோ அல்லது பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களையோ நினைவு கூறுவதற்கு ஒரு போதுமே இடமளிக்க முடியாது அந்த கோரிக்கையை எந்த ஒரு கோணத்திலும் நியாயப்படுத்தவும் முடியாது என அமைச்சரவை பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார் யுத்தத்தினால் செய்ய முடியாததை தற்போது இந்த வேலைத்திட்டத்தினால் செய்ய முயற்சிக்கின்றார்கள் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார் .

. நாட்டை பிரிப்பதற்கான திட்டமிட்ட சதித்திட்டமே திலீபன் விவகாரம், இன்று திலீபனை நினைவுகூர கோருவார்கள், நாளை பிரபாகரனையும், தமிழ்ச்செல்வனையும் நினைவுகூருவதற்கு அனுமதி கேட்பார்கள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் வேறு புலிப்பயங்கரவாதம் வேறு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் திலீபன் விவகாரம் உண்ணாவிரத போராட்டநிலை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர் தெரிவுபடுத்தும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்