டக்ளஸிற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை!

1111 5
1111 5

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு சமரச தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது .

இந்திய பிரதமர் நரேந்திர மேடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற காணொளி மூலமான இருதரப்பு பேச்சு வார்த்தையின் போது பிரதமர் மோடி இதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கடந்த 26 ஆம் திகதி இந்திய பிரதமருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற இணையம் மூலமான கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்து மீறல் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

நீண்ட காலமாக நிலவிவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு இந்திய பிரதமரின் இந்த தீர்மானம் தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இருநாட்டு பிரதமர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனர்வர்களின் அத்துமீறல் குறித்த காணொளி காட்சிகளும் இந்திய பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் மோடி இதனை கவனத்தில் கொண்டு தமிழ் நாட்டுக்கு வெளியான இந்திய அரசாங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு கரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காரையோர பாதுகாப்பு பிரிவினர் மூலம் இதனை தடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கு மீனவர்களும்
இந்திய மீனவர்களுக்கும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.கூட்டு குழுவின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .