விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது 20 ஆவது திருத்ததிற்கு எதிரான மனுக்கள் !

supremecourtcomplex 720x380 1 1
supremecourtcomplex 720x380 1 1

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் இன்று (29) விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன .

பிரதம நீதியரசர் ம் பதலமையிலான 5 நீதியரசர்களை கொண்ட குழுவினால் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்த வரைபிற்கு எதிராக இதுவரை 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்னஜீவன் கூல், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன .

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், 20வது திருத்தத்தை மேற்கொள்ள சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய, நீதிபதிகள் புவனேக அலுவிஹார, நீதிபதி சிசிர டி அப்ரூ, நீதிபதி பிரியந்த ஜெயவர்தன, நீதிபதி விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு முன் விசாரிக்கப்படும்.

கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 20வது திருத்தத்தை நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்திருந்தார் . அதை சவாலுக்கு உட்படுத்த ஒரு வார அவகாசமுள்ளதாகவும் இன்றிலிருந்து 21 நாட்களிற்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .