திலீபனின் போராட்டத்தை ஒரு போதும் கொச்சைப்படுத்தப் போவதில்லை-வியாழேந்திரன்!

WhatsApp Image 2020 10 04 at 03.37.05
WhatsApp Image 2020 10 04 at 03.37.05

தியாகதீபம் திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை நாங்கள் ஒரு போதும் கொச்சைப் படுத்தியதுமில்லை கொச்சைப்படுத்தப் போவதுமில்லை என திட்டவட்டமாக கூறிக் கொள்கின்றேன் திலீபனின் அகிம்சைவழி போராட்டம் என்பது ஒரு சமூகத்தின் விடுதலைக்கு அவர் மேற்கொண்ட போராட்டம் எனவே அந்த போராட்டத்தை நாங்கள் இழிவுபடுத்த முடியாது என தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். 

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04) மட்டக்களப்பில் புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையில் கிறிஸ்தவ மத நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து மத வழிபாட்டின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த காலங்களில் கூட திலீபனின் அகிம்சைவழி போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல அதனை அசிங்கப்படுத்தியவர்களும் அல்ல நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். அதற்கான கௌரவத்தை கொடுத்திருக்கின்றோம். கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

திலீபனின் கனவு என்ன?  இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்களும் ஏனைய சமூகத்துக்கு இணையாக, நிம்மதியாக, தலைநிமிர்ந்து வாழ வேண்டும் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது என்ற அந்த கனவை நனைவாக்க வேண்டும் என்று நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை அவர்கள் மற்ற சமூகத்துக்கு கைகட்டி வாழாமல் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம் .

WhatsApp Image 2020 10 04 at 03.37.00 1

தீலீபனை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துகின்ற ஒரு சிலர் எங்கள் மீது அரசில் காட்புனர்ச்சி காரணமாக எங்கள் மீது நாங்கள் அமைதியாக இருந்தோம் என குற்றமாக கருதுகின்றனர். நாங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போதும் திலீபனின் அந்த அகிம்சைவழி போராட்டத்தை மதிக்கின்றோம் மதித்துக் கொண்டிருக்கின்றோம் இதை தெளிவாக சில விசனத்தனங்களை கூறுகின்றவர்களுக்கு இந்த ஊடக சந்திப்பு வாயிலாக தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரச்சனையை வைத்து நாங்கள் இனிமேல் அரசியல் செய்ய முடியாது நாங்கள் அரசாங்கத்தோடு இருப்பது என்பது பிரச்சனையை வைத்துக் கொண்டு எங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அரசியலை செய்ய முடியாது நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு ஹர்த்தாலை குழப்பவில்லை அதற்கு எதிர்மாறாக செயற்படவில்லை அந்த போராட்த்துக்கு மறுப்பு தெரிவித்ததில்லை கடந்த காலத்தில் 42 மேற்பட்ட போராட்டங்களை மேற்கொண்டோம். மக்களின் நியாயமான போராட்டங்களை மதிக்கின்றோம் அதனை கௌரவிக்கின்றோம் அதுதான் உண்மையும் அதுதான் யதார்த்தமும்.

20 சீர்திருத்தம் என்பது 18 வது சீர்திருத்தத்தை தளுவி அதை நடைமுறைப்படுத்தும் ஒரு செயற்திட்டம் தான் 20 சீர்திருத்த சட்டம் இருக்கின்றது. ஈது தொடர்பாக எதிர்கட்சியில் பல்வேறு எதிர்ப்புக்கள் இருக்கின்றது எது எவ்வாறாக இருந்தாலும் 18 சீர்திருத்தம் 20 சீர்திருத்தமாக ஒரு சில மாற்றத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கின்றது  என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2020 10 04 at 03.36.59
WhatsApp Image 2020 10 04 at 03.37.04