குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ள பிரண்டிக்ஸ் நிறுவனம்!

1602078825 brandicx 2
1602078825 brandicx 2

இலங்கை மக்களை தற்போது அச்சத்துக்குள்ளாக்கியிருக்கும் சம்பவம் மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களால் பரவிய கொரோனா தொற்று.

குறித்த பிரண்டிக்ஸ் நிறுவனம் ஊழியர்கள் தொடர்பில் தகுந்த சுகாதார நடைமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, மற்றும் இந்தியாவிலிருந்து குழுவொன்றை அழைத்து வந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ அண்மையில் எந்தவொரு நபரையும் நாம் அழைத்துவரவில்லை

அதேபோல, ஊழியர்களுக்கு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவும், தேவையான சுகாதார வசதிகளை செய்துகொடுக்கவும் நிறுவனம் முன்வரவில்லை என்று கூறப்படுகிற குற்றச்சாட்டையும் முற்றாக நிராகரிக்கிறோம்.

மேலும் மினுவங்கொடை நிறுவனத்திற்கு முன்பாக இருந்து பெண் ஒருவரால் பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா அவதானம் இருந்தும் தனது வாடகை வீட்டிலிருந்த ஊழியர்களை நிறுவன முகாமை வேலைக்குவரும்படி அழைத்ததாக சொல்லப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பதிலளித்திருக்கும் பிரண்டிக்ஸ் நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டையும் நிராகரித்திருக்கிறது.