இலங்கையில் அஞ்சல் சேவைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாறு காணப்படுகிறது- பிரதமர் பெருமிதம்

ஆண்டுகள் தோறும் அஞ்சல் சேவையினூடாக உலகின் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களிடையே தொடர்பாடல் மாத்திரமின்றி பொருள் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறுகிறது. என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

உலக அஞ்சல் தினமான இன்று(09) அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார் .

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தொழில்நுட்ப மற்றும் நிதி வரையறைகள் இன்றி மிகவும் நெருங்கிய மற்றும் மலிவு விலையில் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் அஞ்சல் சேவை குறித்து இன்னும் பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இலங்கை அஞ்சல் சேவையால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவை அளப்பரியதாகும்.

அத்தோடு ஒல்லாந்தர்கள் தமது ஆட்சி காலத்தில் கடலோர பகுதிகளில் முதலாவது அஞ்சல் அலுவலகம் அமைத்தனர் 1799இல் முதன்முறையாக அஞ்சல் விதிமுறைகளை வெளியிடுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அஞ்சல் சேவைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாறு காணப்படுகிறது எனவும் அவர் தனதுவாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்