நாட்டின் தற்போதை நிலைமையை கருத்தில் கொண்டு வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் – சம்பந்தன்

183441
183441

இலங்கையில் தற்பொழுது அதிகரித்துள்ள கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ் வருட தீபாவளியை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14 ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள கொரோனா திடீர்ப்பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில் நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும்.

எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பவதிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவும் எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இந்தப் பண்டிகை தினத்தினை அவரவர் வீடுகளில் இருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம் என சமந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.