கவனயீனமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளங் காணும் விசேட நடவடிக்கை -அஜித் ரோஹன!

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 2 1

பிரதான வீதிகளில் கவனயீனமாக வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளங் காணும் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று இரவு முதல் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருததுரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மொரட்டுவ எகொட உயன பகுதியில் கர்ப்பிணிப்பெண் உட்பட அவரது இரண்டு குழந்தைகள் வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த மூவரும் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஒருவயது குழந்தை உட்பட 7வயது சிறுமி ஆகியோர் சிகிச்சைகளுக்காக பாணந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இதனிடையே குறித்த கர்ப்பிணிப்பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனயீனம் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டமை விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சந்தேகநபரான 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் உட்பட 24 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.