வவுனியாவில் சீரற்ற காலநிலையால்அவதியுறும் கற்குளம் மக்கள்!

IMG 20201207 161514
IMG 20201207 161514

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டத்தில் . 143 குடும்பங்களை சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கற்குளம் படிவம் 4 கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக தொடர்சியாக மழைவீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் கற்குளம் கிராமத்தில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 37 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகரக் கூடாரங்களுக்குள்ளும், மண்வீடுகளிலும் கைக் குழந்தைகள் கற்பிணித்தாய்மார், மற்றும் முதியவர்கள் என பலரும் இக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போதைய அடை மழை காரணமாக மக்கள் வசிக்கும் கூடாரங்களின் சுவர்கள் ஊறி இடிந்து விழும் அபாயநிலையில் இருக்கின்றது. வீடுகளுக்குள் மழைநீர் ஊற்றெடுத்து காணப்படுகின்றது.

மலசலகூடம், நிரந்தரவீடு, மின்சாரம், குடிநீரென அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்டுப்பகுதியை அண்டிய சூழலில் மக்கள் பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில் கற்குளம் மக்கள் அன்றாட தேவைகளுக்காக நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகளென பலரும் கிராமத்து மக்களின் பக்கம் தமது பார்வையை செலுத்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்புஎன்பதும் குறிப்பிடத்தக்கது

IMG 20201207 161548
IMG 20201207 161438
IMG 20201207 161601
IMG 20201207 161502
IMG 20201207 161410
<